கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் உடன் இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 31 அன்று படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்தாற்போல் பிப்ரவரி 10 அன்று அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக இருக்கிறது.
கேங்ஸ்டர் ஜானர்
விக்ரம் தேச பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்து ரவுடியாக மாறுவதுபோல ட்ரெய்லர் அமைந்துள்ளது. விக்ரமின் மகனாக துருவ் நடித்துள்ளார். ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
கார்த்திக் சுப்புராஜின் கேங்ஸ்டர் ஸ்டோரிகளான ஜிகர்தண்டா, பேட்ட வரிசையில் இதுவும் சிறந்த படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க:வைகைப்புயலிடம் வம்பு வச்ச ரெடின் - சூட்டிங்கை கேன்சல் செய்த வடிவேலு