ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் 'மகான்'. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது.
'எவன்டா எனக்கு கஸ்டடி..!' எனத் தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 'யெவ்வர்ரா மனகி கஸ்டடி..!' என்றும், மலையாளத்தில் 'இனி ஈ லைப்ஃபில்..!' என்றும், கன்னடத்தில் 'யவனோ நமகே கஸ்டடி..!' என்றும் வெளியாகியிருக்கிறது.
இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் சீயான் விக்ரமுடன் அவரின் மகனான துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் 'மகான்' வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு 'மகா புருஷா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!