ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் மகான்?

author img

By

Published : Jan 5, 2022, 12:25 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் மகான்?
மகான்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்'. இத்திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா காரணமாக இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 26ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிம்புவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.