ஹைதராபாத்: நடிகர் சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப்படத்தில், சர்வானந்த், அதிதி ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
மகா சமுத்திரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் டிரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது.
அந்த நிகழ்வில் சித்தார்த் கலந்துகொள்ளவில்லை. இந்தப்படம் குறித்து அடிக்கடி ஒரு முறை பெருமிதமாக பேசிவந்த சித்தார்த் விழாவில் கலந்துகொள்ளாதது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் அவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் அஜய்பூபதியிடம் கேட்டனர்.
சித்தார்த் ஒரு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், அதனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை எனவும் கூறியுள்ளார். இருப்பினும், இதுதொடர்பாக சித்தார்த் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாலை சுருட்டு... இன்று மாலை ருத்ர தாண்டவம் லிரிக் வீடியோ