ETV Bharat / sitara

இளையராஜா இசையில் மதுரை மணிக்குறவர் விரைவில் வெளியீடு! - Madurai Manikkuravar

இளையராஜா இசையில் உருவாகியுள்ள மதுரை மணிக்குறவர் படம் விரைவில் வெளியாகிறது. இப்படத்தில் ஹரிக்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

Madurai Manikkuravar
Madurai Manikkuravar
author img

By

Published : Aug 31, 2021, 12:09 AM IST

சென்னை : இளையராஜா இசையில் உருவாகியுள்ள மதுரை மணிக்குறவர் திரைப்படம் திரையரங்கில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. படத்தை காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் G.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி இயக்கியுள்ளார்.

ஹரிக்குமார் இரட்டை வேங்களில் நடித்துள்ளார். மதுரை மன்னர் மணிக்குறவர் அறக்கட்டளை நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மணிக்குறவ(ன்) எனும் பெயரை மதுரை மணிக்குறவ(ர்) என்று மாற்றப்பட்டுள்ளது.

Madurai Manikkuravar
மதுரை மணிக்குறவர்
மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலும் பல கொலைக்குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உண்மைச்சம்பவங்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட கதையே மதுரை மணிக்குறவர்.
தூத்துக்குடி பட நாயகன் ஹரிக்குமாருடன் மாதவி லதா கதாநாயகியாக நடிக்க G.காளையப்பன், சுமன், ராதா ரவி, கெளசல்யா, பருத்திவீரன் சரவணன், பருத்தி வீரன் சுஜாதா, எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், அஸ்மிதா, பெசன்ட் நகர் ரவி போன்ற 30 முன்னணி நட்சத்திரங்கள் உள்ளனர்.
Madurai Manikkuravar
மதுரை மணிக்குறவர்
இசைஞானி இளையராஜா, பாடலாசிரியர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர் டி. சங்கர், எடிட்டர் வி. டி. விஜயன் போன்ற பிரபல தொழிற்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலம்.
ஏற்கனவே வலையொளியில் (யூ டியூப்) இப்படத்திலுள்ள இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான G.காளையப்பன் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்துகிறார். இவருடன் இணைந்து நடித்த ராதாரவி, சுமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : நடிகர் சித்ரா லட்சுமணன் மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.