ETV Bharat / sitara

உடைந்தது இதயகோயில்... உதிர்ந்தது ரோஜா- முறிந்த மணிரத்னம், வைரமுத்து கூட்டணி!

'பொன்னியின் செல்வன்' படத்தில் வைரமுத்துவுக்குப் பதிலாக மணிரத்னம் வேறு பாடலாசிரியரைப் பயன்படுத்தவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Lyricist Vairamuthu out of Mani Ratnam's Ponniyin Selvan

author img

By

Published : Dec 19, 2019, 11:04 AM IST

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் கூட்டணியான மணிரத்னம் - வைரமுத்து இடையே பிரிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. 'இதயகோயில்' படத்தின் மூலமாக மணிரத்னத்துடன் இணைந்த வைரமுத்து, 'ரோஜா' படத்துக்குப் பிறகு அவரின் ஆஸ்தான பாடலாசிரியராக மாறினார். கடைசியாக மணிரத்னம் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வரை வைரமுத்துவின் கைவண்ணத்தில்தான் பாடல்கள் உருவாகின. தற்போது மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இந்தக் கூட்டணியில் விரிசல் எனக் கூறப்படுகிறது.

பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் குறித்து பதிவு செய்யும் #Metoo புகாரில் வைரமுத்து சிக்கியதே இதற்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரளித்திருந்தார். மீடூவில் சிக்கிய திரைத்துறை பிரபலங்களுடன் பணிபுரிவது கடும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது. இதனால்தான் வைரமுத்துவுக்கு மணிரத்னம் டாட்டா சொன்னதாகக் கூறப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு யார் பாடலாசிரியர் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: நகரமயமாதலில் சிக்கி கொண்ட'சில்லுக் கருப்பட்டி'யின் மூன்று பருவ காதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.