மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களாக ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோர் வலம் வருகின்றனர். இவர்களுக்கென ரசிகர்கள் பட்டளம் உள்ளது. இந்நிலையில், மூவரும் நட்பை போற்றும் வகையில், குடும்பத்துடன் ஒன்றுகூடி குதூகலிக்கும் செல்பியை நடிகை நஸ்ரியா சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், நடிகர் ஃபகத் ஃபாசில் அவரது மனைவியும் நடிகையுமான நஸ்ரியா, நடிகர் துல்கர் சல்மான் அவரது மனைவி அமல் சுபியா, நடிகர் பிரித்விராஜ் அவரது மனைவி சுப்ரியா ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர். இந்தபுகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்குள் குவித்து வருகின்றன.
விரைவில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'கோல்ட் கேஸ்', ஃபக்த் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'மாலிக்' படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.