தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மனோகர். இவர் தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற தொடரில் நடித்துப் புகழ் பெற்றார். அன்றில் இருந்து இவர் லொள்ளு சபா மனோகர் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழில் காதல் எப்எம், மலை மலை, ஈசா, வாடா, மாஞ்சா வேலு, அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, என்றென்றும் புன்னகை போன்ற 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் இன்று தனது 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HBD லொள்ளு சபா மனோகர்