மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இறுதியாக விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவருக்கு கடந்த மாதம் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல்.06) தேர்தல் நாளையொட்டி தனது வாக்கினைப் பதிவு செய்த லோகோஷ் கனகராஜ், தான் வாக்கு செலுத்தும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![கரோனாவிலிருந்து மீண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11298328_776_11298328_1617694176509.png)
அதில், “கரோனாவிலிருந்து மீண்டுவிட்டேன். கரோனா பரிசோதனை செய்ததில் நெகடிவ் என வந்துள்ளது. எனக்காக வேண்டிக்கொண்ட நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வளசரவாக்கத்தில் சிவகார்த்திகேயன், சீமான் வாக்களிப்பு