'கைதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 'எவனென்றுநினைத்தாய்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் கமல்ஹாசனின் 232ஆவது படமாகும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'மாஸ்டர்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின்போதே லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல் நடித்து தயாரிக்க உள்ள ஒரு படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் வெளியாகின. லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை வைத்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.