அண்மையில், ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர்.
மேலும் சிலர் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள், 12 ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உள்ளிட்ட 129 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்கள் நடிகர் விஜய்யை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது வெற்றி பெற்றவர்கள் விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் குழு புகைப்படத்தில் விஜய், வெற்றி பெற்றவர்களுடன் நடுவில் இல்லாமல் ஒரத்தில் இருக்கிறார்.
இதைப்பார்த்த அவரது ரசிகர்கள், சமூகவலைதளத்தில் அவரது எளிமையை குறித்தும் பெருந்தன்மையை குறித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்றிய , மாவட்ட கவுன்சிலர் இடங்களுக்கு போட்டியிட்டவர்கள் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அவரது கருத்துகள் என்னை புண்படுத்தின' - நடிகர் விஜய்