கரோனா தொற்று காரணமாக இன்னும் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் தொடங்கி சிறிய நடிகர்களின் படங்கள்வரை ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அந்தவரிசையில் இந்த வாரம் எத்தனை படங்கள் ஓடிடியில் வெளியாகிறது என்பதைப் பார்ப்போம்...
நெற்றிக்கண்
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'நெற்றிக்கண்'. இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படம் வரும் 13ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
முன்னதாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் கடந்த ஆண்டு இதே டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது.
புஜ் - தி ப்ரைட் ஆஃப் இந்தியா
1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் 'புஜ்'. அஜய் தேவ்கன், சஞ்சய் தட், சொனாக்ஷி சின்ஹா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். 'புஜ்' படம் வரும் 15ஆம் தேதி சுதந்தர தினத்தை முன்னிட்டு டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
ஷெர்ஷா
சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் இணைந்திருக்கும் படம், 'ஷெர்ஷா'. இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படம் வரும் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்தி மொழியில் வெளியாகிறது.
குருதி
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்திருக்கும் ‘குருதி’ திரைப்படத்தை, மனு வாரியர் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 11ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
முன்னதாக, ’குருதி’ படம் ஓணம் பண்டிகைக்குத் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த நிலையில், திரையரங்குகள் திறக்காததால் தற்போது ஓடிடியில் வெளியாகிறது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் ஷுட்டிங்... குடும்பத்தை கையோடு அழைத்து சென்ற கங்கனா