ETV Bharat / sitara

ஆஸ்கார் சென்ற முதல் நைஜீரிய திரைப்படம் புறக்கணிப்பு - பின்னணி என்ன?

author img

By

Published : Nov 5, 2019, 5:36 PM IST

நைஜீரியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு சமர்பிக்கப்பட்ட ‘லயன்ஹார்ட்’ (Lionheart) என்ற திரைப்படம் புறக்கணிக்கப்பட்டதால் விமர்சனம் எழுந்துள்ளது.

Lionheart

ஜெனிவீவ் நாஜி இயக்கி நடித்துள்ள நைஜீரிய திரைப்படம் ‘லயன்ஹார்ட்’ (Lionheart). சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுபெறும் பிரிவில் சமர்பிக்கப்பட்ட இந்தப் படத்தின் சில பகுதிகள் நைஜீரியாவில் பேசக்கூடிய இக்போ மொழியில் உள்ளது. பெரும்பான்மையான பகுதிகள் ஆங்கிலத்தில் இருப்பதால் இந்தப் படத்தை அகாடமி விருதுகளின் நடுவர் குழு புறக்கணித்துள்ளது. ஆனால் நைஜீரியாவில் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழி என்பதை நடுவர் குழு மறந்துவிட்டது.

Lionheart
Lionheart -1

இதுகுறித்து அமெரிக்க இயக்குநர் அவா டூவர்னே, ஆங்கில மொழி அதிகம் பேசப்பட்டதற்காக சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுபெறும் பிரிவில் சமர்பிக்கப்பட்ட முதல் நைஜீரிய திரைப்படத்தை நீங்கள் புறக்கணித்திருக்கிறீர்கள். ஆனால் ஆங்கிலம்தான் நைஜீரியாவின் அதிகாரப்பூர்வ மொழி. நைஜீரியா தனது அதிகாரப்பூர்வ மொழியில் படத்தை சமர்பித்ததற்காகவா அதனை புறக்கணித்தீர்கள் என ஆஸ்கர் நடுவர் குழுவை கேள்வி எழுப்பியுள்ளார்.

Lionheart
Lionheart -2

நைஜீரியாவில் 500க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகிறது. எங்கள் மக்களுக்கு இடையே பாலமாக இருப்பது ஆங்கில மொழிதான், உங்கள் ஆதரவுக்கு நன்றி அவா டூவர்னே என ‘லயன்ஹார்ட்’ பட இயக்குநர் ஜெனிவீவ் தெரிவித்துள்ளார். சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான பிரிவில் அளிக்கப்படவுள்ள ஆஸ்கார் விருதுகள், முன்பு சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவு என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர்கள் விஜய், கெளதம் மேனனுக்கு நீதிமன்றம் உத்தரவு

Intro:Body:

First nigerian movie for Oscar nomination rejected

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.