நடிகர் கவின், அமிர்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'லிப்ட்'. அறிமுக இயக்குநர் வினீத் இயக்கிய இந்தப் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
சென்னையில் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் கதாநாயகனும், கதாநாயகியும் எதிர்பாராத விதமாக இரவு அலுவலக கட்டடத்தில் சிக்கி கொள்கின்றனர். அமானுஷ்யமான அந்த கட்டத்திலிருந்து அவர்கள் இருவரும் எப்படித் தப்பித்துச் செல்கின்றனர் என்பதைத் திகில் கலந்த பாணியில் காண்பித்துள்ளார் படத்தின் இயக்குநர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல திகில் படம் பார்த்ததுபோல் இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் லிப்ட் படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தனது முதல் படத்தையே வெற்றிப் படமாக இயக்கிய வினீத் வரபிரசாத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ரௌடி பேபி'... ஹன்சிகாவின் புதிய படம் ஆரம்பம்