ETV Bharat / sitara

நடிகர் அஜித் பெயரை தவறாகப் பயன்படுத்தக் கூடாது - சட்ட ஆலோசகர் அறிக்கை...! - Actor Ajithkumar

சென்னை: நடிகர் அஜித் குமாரின் பெயரை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என அவரது தரப்பில் சட்ட ஆலோசகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் பெயரை தவறாகப் பயன்படுத்த கூடாது -சட்ட ஆலோசகர் அறிக்கை...!

author img

By

Published : Sep 17, 2020, 5:01 PM IST

Updated : Sep 17, 2020, 5:13 PM IST

இது குறித்து நடிகர் அஜித் குமாரின் சட்ட ஆலோசகர் எம்.எஸ். பரத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் அஜித் குமார் சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் (அஜித் குமார்) அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் அவரது கவனத்துக்கு வந்துள்ளன.

இதையொட்டி, என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகார புர்வமாக அறிவிக்கிறார்

மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை சுரேஷ் சித்ராவிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால் அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவப்பதோடு, பொது மக்களும், இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்!

Last Updated : Sep 17, 2020, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.