ETV Bharat / sitara

'பணத்துகாக இதை செய்ய மாட்டேன்' - பிக்பாஸ் நிகழ்ச்சியை சாடிய லட்சுமி மேனன்! - பிக்பாஸ் 4

பிக்பாஸ் ஒரு கேவலமான நிகழ்ச்சி என்று நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாடியுள்ளார்.

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்
author img

By

Published : Sep 27, 2020, 8:15 PM IST

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம்போல் கடந்த மூன்று சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இதில் யார், யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகததால் பலரும் தங்களது யூகங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், நெட்டிசன்கள் பலரும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி மேனன் கலந்துகொள்ள போகிறார் என்று செய்தி வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லட்சுமி மேனன் வெளியிட்ட பதிவு
லட்சுமி மேனன் வெளியிட்ட பதிவு

அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அடுத்தவர்கள் சாப்பிட்ட உணவையும், அடுத்தவர்கள் உபயோகித்த கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதுமட்டுமின்றி கேமரா முன்பு சண்டை போட நான் தயாராக இல்லை. இதற்கு பிறகாவது ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன் என்று சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’பிக்பாஸ் 4’ தொடங்கும் தேதி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.