ETV Bharat / sitara

'தயவு செய்து ஊசி போட்டுக்கோங்க...': நடிகை நயன்தாரா - நயன்தாராவின் லேட்டஸ் செய்திகள்

சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

nayanthara
nayanthara
author img

By

Published : May 18, 2021, 9:59 PM IST

இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக திரைப்பிரபலங்கள் பலர் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா இன்று (மே 18) கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இவருடன் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். அதன்பின் நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் "தயவு செய்து ஊசி போட்டுக்கோங்க" எனப் பதிவிட்டு ஊசி போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.