ETV Bharat / sitara

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த 'லாபம்' - ஸ்ருதிஹாசன்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'லாபம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

File pic
author img

By

Published : May 14, 2019, 7:36 AM IST

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', புறம்போக்கு எனும் பொதுவுடைமை உள்ளிட்ட நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து 'புறம்போக்கு' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து 'லாபம்' எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆறுமுககுமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றார். ராம்ஜி ஒளிப்பதிவில், டி.இமான் இசையில் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி
முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த லாபம்

சமீபத்தில் இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. மதுரை, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கான தொடர் படப்பிடிப்பு தென்காசி, மதுரை எனப் பல தென் மாவட்ட ஊர்களில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

#Laabam 1st Schedule Successfully Wrapped Up.

@VijaySethuOffl @shrutihaasan #SPJhananathan @7CsPvtPte @vsp_productions @Aaru_Dir @immancomposer @ramji_ragebe1 @sathishoffl @KalaiActor
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.