வாஷிங்டன்: முன்னாள் காதலர் ட்ராவிஸ் ஸ்காட்டுடான ரெமாண்டிக் தருணத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஹாலிவுட் பிரபலமும், நடிகையுமான கெய்லி ஜென்னர்.
ஹாலிவுட் டிவி பிரபலம் கிம் கர்தாஷியனின் தங்கையும், இளம் நடிகையுமான கெய்லி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முன்னாள் காதலர் ட்ராவிஸ் ஸ்காட்டுடன் நெருக்கமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை ரயிலாக விட்டுள்ளார்.
![Kylie jenner posts romantic throwback with ex-Travis scott](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kylei-jenner-3_2902newsroom_1582992745_272.jpg)
2017ஆம் ஆண்டில் விளையாட்டுப் போட்டி ஒன்றில் இருவரும் இணைந்து பங்கேற்றனர். அப்போது இருவரும் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டு ரகசியம் பேசுவதும், கிசுகிசுப்பதுமாக இந்தப் புகைப்பட வரிசை அமைந்துள்ளது.
![Kylie jenner posts romantic throwback with ex-Travis scott](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kylei-jenner-4_2902newsroom_1582992745_164.jpg)
இதில், ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு வார்த்தைகளோடு, 'அது ஒரு விதமான மனநிலை' என்பதை குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் தங்கள் தலைமுடியை பிய்த்துக்கொள்ள வைத்துள்ளது.
![Kylie jenner posts romantic throwback with ex-Travis scott](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kylei-jenner-5_2902newsroom_1582992745_690.jpg)
முன்னதாக, ராப் பாடகர் டைகா என்பவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டிருந்த கெய்லி ஜென்னர், 2017ஆம் ஆண்டு அவரைப் பிரிந்தார்.
இதையடுத்து சில மாதங்களிலேயே மற்றொரு ராப் பாடகர் ட்ராவிஸ் ஸ்காட் என்பவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து கெய்லி - ஸ்காட் ஆகியோர் பெண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு ஸ்டோர்மி எனப் பெயர் வைத்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் அளித்தனர். இவர்கள் தங்களது பிரிவை அறிவித்து ஆறு மாதம் கூட முழுவதுமாக ஆகாத நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் தங்களது குழந்தையுடன் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உலா வந்தனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் கெய்லி - ஸ்காட் ஆகியோர் சமரசம் செய்துகொண்டு மீண்டும் இணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விவாதித்துவருகின்றனர்.
அது உண்மைதான் என்பதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது கெய்லியின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அமைந்திருக்கிறது.