சமீபத்தில் வெளியான 'மிக மிக அவசரம்' என்னும் திரைப்படத்தை இயக்கி தயாரித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் நடிகர் சிம்புவை வைத்து தயாரிக்கும் அரசியல் படமான 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.
தற்போது ஒரு இணைய தொடருக்காக இயக்குநர் பாரதிராஜாவுடன் சுரேஷ் காமாட்சி இணைந்து பணிபுரிய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
தனது கனவு படைப்பான 'குற்றப் பரம்பரை' கதையை பாரதிராஜா இயக்கப்போவதாகவும், அதை சுரேஷ் காமாட்சி தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் 'குற்றப் பரம்பரை' நாவலைத் தழுவி அதே பெயரில் இந்த இணைய தொடர் தயாரிக்கப்படவுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் பாலா இந்நாவலை படமாக எடுக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்' - சிறுமியை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்த மாணவன்!