ETV Bharat / sitara

'தலைவர் 168' கொஞ்சம் பயம்; பெரிய சந்தோஷம் - குஷ்பு ட்வீட்! - குஷ்பு தலைவர் 168

'தலைவர் 168' படப்பிடிப்பில் கலந்துகொள்வது சிறிது பயமாகவும், அதிக எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது என குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

kushboo
kushboo
author img

By

Published : Dec 22, 2019, 2:44 PM IST

'தர்பார்' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்துள்ளார். 'தலைவர் 168' என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படமும் கிராமத்துக் குடும்ப பின்னணியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணன் - தங்கை, அப்பா - மகள், அண்ணன் - தம்பி என குடும்ப பிணைப்பை மையமாக வைத்து சிவா இயக்கிய அனைத்துப் படங்களுமே வசூல் சாதனை படைத்த நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

  • Landed in Hyderabad.. tomorrow I start shooting for #Thalaivar168 A bit nervous and excited at the same time. Getting back to your roots is overwhelming. Wish me luck friends. ❤️

    — KhushbuSundar ❤️ (@khushsundar) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'தலைவர் 168' படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து இன்று (டிச.22) ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில் நடிகை குஷ்பு கலந்துகொள்கிறார்.

இதற்காக அவர் நேற்று ஹைதராபாத் வந்துள்ளார். படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். இதில் கலந்துகொள்ளவிருப்பது சிறிது பயமாகவும் அதே நேரத்தில் அதிக எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பது பெரிய சந்தோஷம் என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் இப்படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ், மீனா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஷ்பு ஏற்கனவே ரஜினியுடன் 'தர்மத்தின் தலைவன்', 'மன்னன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Intro:Body:

kushboo joins in thalaivar 168 shooting

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.