ETV Bharat / sitara

டி.ராஜேந்தர் வீட்டில் டும் டும் டும்: விஜயகாந்துக்கு அழைப்பு!

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசன் திருமணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.

டி.ராஜேந்தர்
author img

By

Published : Apr 6, 2019, 12:33 PM IST

'சொன்னால்தான் காதலா', 'காதல் அழிவதில்லை', 'அலை' ஆகிய படங்களில் நடித்தவர் குறளரசன். இதனைத்தொடர்ந்து சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும், குறளரசன் இஸ்லாமிய பெண்ணை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. திடீரென இஸ்லாம் மதத்தை தழுவினார்.

இந்நிலையில், குறளரசனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசன் திருமணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். இவர்களுடன் குறளரசனும் உடனிருந்தார்.

நடிகர் சிலம்பரசன் வீட்டு திருமணம் பிரபலங்களுக்கு அழைப்பிதழ்

லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் டி ராஜேந்தரின் இளைய  மகனும் நடிகர் சிலம்பரசனின் சகோதரனுமான குறளரசன். இது நம்ம ஆளு படத்தின் மூலமாக இசையமைப்பாளராக திரை உலகில் அறிமுகம் ஆனார். இவர் இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து வருவதாக  செய்திகள் வெளிவந்த நிலையில் திடீரென்று இவர் இஸ்லாம் மதத்தை தழுவினார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் நடைபெறலாம் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது டி ராஜேந்தர் 
 
தனது மகன் குறளரசன் திருமணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்   கொடுத்துள்ளார்.

திருமணம் இம்மாதம் 30 ஆம் தேதி அல்லது மே மாதம் 1 தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  தமிழ் திரைப்படத்துறை மற்றும் அரசியல் துறை  சார்ந்த பல்வேறு பிரபலங்களை  நேரில் சந்தித்து இதழ் அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து விரைவில் டி ராஜேந்திரன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.