Oscar race: 94ஆவது ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் 'கூழாங்கல்'. வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படமானது ஏற்கனவே சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இடம் பெற்றிருந்த 15 படங்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் 'கூழாங்கல்' திரைப்படம் இடம்பெறவில்லை.
இதுகுறித்து கூழாங்கல் படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன், இறுதிப் பட்டியலில் தங்கள் படம் இடம்பெற்றிருந்தால் மகிழ்ச்சியளித்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூழாங்கல் திரைப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கும் வினோத்ராஜ், ஆஸ்கருக்கு பரிந்துரைத்த இந்திய நடுவர் குழு ஆகியோருக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Blood Money Movie:'நெல்சனால்தான் எல்லாமே...'; மனம் திறந்த பிரியா பவானி சங்கர்!