ETV Bharat / sitara

கேஜிஎஃப் 2 டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு - கேஜிஎஃப் 2 டீசர்

சென்னை: கேஜிஎஃப் சேப்டர் 2ன் டீசர் ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கேஜிஎஃப்
கேஜிஎஃப்
author img

By

Published : Jan 4, 2021, 4:10 PM IST

யாஷ் பிறந்தநாளை ஒட்டி ஜனவரி 8 2021, காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2வின் டீஸர் வெளியிடப்படுகிறது. ஹோம்பாலே யூடியூப் சேனலில் இந்த டீஸர் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2021 புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். சினிமா ரசிக பெருமக்களுடனான எங்களின் இந்தப் பயணம் மிகவும் அழகானதாக அமைந்துள்ளது. இந்த அழகான பயணத்தை நாங்கள் என்றென்றும் நினைவுகூர்கிறோம்.

எங்களுடன் துணை நின்றமைக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு தாங்கள் தோள் கொடுத்தீர்கள். ஆகையால், அத்திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமித அடையாளமானது.

தற்போது, ஜனவரி 8ஆம் தேதி கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர் வெளியாகவிருக்கிறது. இதுவும் நிச்சயமாக இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் என நம்புகிறோம். அதற்கு ரசிக பெருமக்களின் பலம்வாய்ந்த ஆதரவையும் அன்பையும் கோருகிறோம். இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் நேர்மறையானவற்றையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் சேர்க்கட்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.