கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முன் வந்துள்ளனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ’பென்குயின்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படம் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இதேபோல் நடிகை ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படமும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயார்' - மஹத் ராகவேந்திரா