தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் கீர்த்தி. இவரைச் செல்லமாக கிகி என அழைப்பர். இவர் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சென்னையில் பிறந்துவளர்ந்த கீர்த்தி ஒரு நடன குடும்பத்தின் வாரிசு. இவர் தனது கணவருடன் கிக்கி டான்ஸ் ஸ்டுடியோ என்ற நடனப் பள்ளியை நடத்திவருகிறார். தொகுப்பாளினி, நடன ஆசிரியர் எனத் திறமை காட்டிவந்த கீர்த்தி கரோனா அச்சுறுத்தலின்போது தனது கணவர் எடுத்த குறும்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
-
First look of #EngaPoraDe ❤️🍃
— kiki vijay (@KikiVijay) November 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
A #Dadson pictures originals !
Choreographed & Directed by @BrindhaGopal1
A @dharankumar_c musical 🎶
Singer @imKBRshanthnu
Lyrics @RJVijayOfficial @onlynikil pic.twitter.com/BQpxG1S1GI
">First look of #EngaPoraDe ❤️🍃
— kiki vijay (@KikiVijay) November 26, 2020
A #Dadson pictures originals !
Choreographed & Directed by @BrindhaGopal1
A @dharankumar_c musical 🎶
Singer @imKBRshanthnu
Lyrics @RJVijayOfficial @onlynikil pic.twitter.com/BQpxG1S1GIFirst look of #EngaPoraDe ❤️🍃
— kiki vijay (@KikiVijay) November 26, 2020
A #Dadson pictures originals !
Choreographed & Directed by @BrindhaGopal1
A @dharankumar_c musical 🎶
Singer @imKBRshanthnu
Lyrics @RJVijayOfficial @onlynikil pic.twitter.com/BQpxG1S1GI
தற்போது DadSon பிக்சர்ஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கும் 'எங்க போற டி' என்னும் படத்தில் கீர்த்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நாயகனாக கீர்த்தியின் கணவரும் நடிகருமான சாந்தனு நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். இதில் சாந்தனு பாடலும் பாடஇருக்கிறார்.
இந்தப் படம் பிருந்தாவின் இரண்டாவது படமாகும். இவர் ஏற்கனவே துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி உள்ளிட்டோர் நடிக்கும் 'Hey Sinamika' என்னும் படத்தை இயக்கிவருகிறார். 'எங்க போற டி' காணொலி பாடலாக உருவாகிறதா அல்லது படமாக உருவாகிறதா என்பது போகப்போகத்தான் தெரியும்.