சென்னை: கயல் ஆனந்தி நடிப்பில் தயாராகி வரும் 'கமலி from நடுக்காவேரி' படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பூதக்கண்ணாடி வழியே வெயிலின் வெப்பத்தைப் பிரதிபலிக்க விட்டு பட்டாசு வெடிக்க வைத்து, பள்ளி மாணவியான கயல் ஆனந்தி லூட்டி செய்யும் காட்சிகளும், அவரது க்யூட் தருணங்களும் 'கமலி from நடுக்காவேரி' படத்தின் டீஸரில் இடம்பிடித்துள்ளன.
ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராமல், கேள்வித்தாளைப் பார்த்து சந்தேகம் கேட்கும் ஆனந்தி, ஊரே மெச்சும் அளவுக்கு படிப்பில் சாதித்து தனது சொந்த ஊரான நடுக்காவிரியின் அடையாளமாக எப்படி மாறுகிறார் என்பதை காமெடி, குறும்புத்தனம், காதல் கலந்து படத்தில் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், அவற்றால் அவர்கள் பெறும் வலிமையும் 'கமலி from நடுக்காவேரி' தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கயல் ஆனந்தி பிரதான கதாபாத்திரத்திலும், புதுமுகம் ரோஹித் செராப் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளார்கள். படத்தை ராஜ்குமார் துரைசாமி இயக்கியுள்ளார்.