இயக்குநர் இ.வி கணேஷ்பாபு இயக்குநராகவும் கதாநாயகனாகவும் நடிக்கும் படம் கட்டில். கட்டிலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், பொங்கல் விழாவை கட்டில் திரைப்பட குழுவினர் கொண்டாடினர்.
இது குறித்து இயக்குநர் கணேஷ்பாபு கூறுகையில், காரைக்குடியில் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பின் போது 'கட்டில்' திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
உழைக்கும் மக்களுக்கும் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை 'கட்டில்' படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கேவுடனும் படக்குழுவினருடனும் கொண்டாடியது தனிச்சிறப்பு. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.