இ.வி. கணேஷ் பாபு இயக்குநராகவும், கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் 'கட்டில்'. கட்டிலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சிருஷ்டி டாங்கே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இதில் கீதா கைலாசம், 'மாஸ்டர்' நிதீஷ், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம், செம்மலர் அன்னம், 'மெட்டி ஒலி' சாந்தி, 'காதல்' கந்தாஸ், சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கட்டில் திரைப்படம் பெங்களூருவில் நடைபெற்றுவரும், இன்னோவேட்டிவ் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும் விழாவில், கட்டில் திரைப்பட உருவாக்கம் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலின் பிரதியை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டார்.
திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள கட்டில் திரைப்படம் பல்வேறு பன்னாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது எனப் படத்தின் இயக்குநர் இ.வி. கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கட்டில் திரைப்படம் புனேவில் நடைபெற்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டு விரைவில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மொழி படத்தின் நாயகனுக்கு இன்று பிறந்தநாள்