ETV Bharat / sitara

'கட்டில்' திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு!

பல்வேறு விருதுகளை தொடர்ச்சியாக குவித்து வரும் கட்டில் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று (டிச. 29) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

author img

By

Published : Dec 29, 2021, 10:43 PM IST

'கட்டில்' திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு!
'கட்டில்' திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு!

கட்டில் என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே நாயகியாகவும், டைரக்டர் பாலசந்தர் மருமகள் கீதா கைலாசம், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், நிதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து, மதன் கார்க்கி கூட்டணியிலும் பாடல்கள் உருவாகியுள்ளன. இத்திரைப்படத்தை மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள கட்டில் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று (டிச. 29) வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக விருதுகளை குவித்து வருகிறது. நாளை தொடங்கவுள்ள 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகாவும் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காலை இழந்தும் கவர்ச்சியில் கலக்கும் தன்னம்பிக்கை நாயகி அங்கிதா ஷோரே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.