ETV Bharat / sitara

'பிக்பாஸ் வீடு மாதிரி ஆய்டுச்சு... அடுத்த எலிமினேஷன் யாரு?' - கமலை கலாய்த்த கஸ்தூரி

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவதை பிக்பாஸ் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு நடிகை கஸ்தூரி பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

author img

By

Published : May 15, 2021, 9:44 PM IST

'பிக்பாஸ் வீடு மாதிரி ஆய்டுச்சு.. அடுத்த எலிமினேஷன் யாரு?' - கமலை கலாய்த்த கஸ்தூரி

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக களமிறங்கி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து மநீம கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகினர். மேலும் பலர் விலகுவதாகத் தகவல் வெளியாகியது.

கமல் ஹாசனுடன் கஸ்தூரி
கமல் ஹாசனுடன் கஸ்தூரி

உடனே கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தை விட்டு மகேந்திரனைத் தவிர வேறு யாரும் வெளியேறவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், தற்போது அவரே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவரைத் தொடர்ந்து மநீம சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியாவும் கட்சியிலிருந்து விலகியுள்ளார். தேர்தல் பரப்புரையின்போது சூறாவளி பரப்புரையை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, தற்போது சூறாவளி காற்றாக வீசிய உட்கட்சிப் பூசலால் முக்கிய நிர்வாகிகளை இழந்துவருகிறது.

கஸ்தூரி ட்வீட்
கஸ்தூரி ட்வீட்

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான கஸ்தூரி இதுதொடர்பாக மே 13ஆம் தேதி ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டார். தற்போது இந்த ட்வீட் வைரலாக பேசப்படுகிறது.

அதில், "மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட யூ டியூபர் பத்மபிரியா, வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில், தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்னர் தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே தெரிகிறது. அடுத்த எலிமினேஷன் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.