சமீப காலமாக ஆந்தாலஜி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துவருவதால் பலரும், இதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கசடதபற'.
மொத்தம் ஆறு கதைகள் உள்ளடக்கிய இந்தப் படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி நடிகர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், மியூசிக் டைரக்டர்கள் எனப் புதுமையாக உருவாக்கப்படவுள்ளது.
இதில் ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். நாயகிகளாக விஜய லட்சுமி, பிரியா பவானி சங்கர், ரெஜினா கஸாண்ட்ரா, சிஜா ரோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
![கசடதபற](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12888181_kasadathapara.jpg)
இந்நிலையில் இத்திரைப்படம் நேரடியாக இன்று (ஆகஸ்ட் 27) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் படம் வெளியான சிறிது நேரத்திலேயே தயாரிப்புத் தரப்பு பிரச்சினை காரணமாக படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனால் படத்தைப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
'புலி' படத்தை அடுத்து சிம்புதேவன் வடிவேலுவை வைத்து 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2' படத்தை இயக்கினார். படப்பிடிப்பில் வடிவேலுவுக்கும் படக்குழுவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தெலுங்கு பக்கம் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் - 'ரிபப்ளிக்' ஃபர்ஸ்ட் லுக்