ETV Bharat / sitara

'கைதியின்' புதிய படங்களின் அப்டேட்! - சிவகார்த்திகேயன் ஹீரோ

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படங்கள் வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

kaithi
author img

By

Published : Oct 31, 2019, 6:46 PM IST

Updated : Oct 31, 2019, 10:43 PM IST

கைதி படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு #கார்த்தி20 என்ற தற்காலிகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் 'பேரலல் மைண்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், ஆன்சன் பால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதே தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’ஹீரோ’ படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூரரைப் போற்று’ படமும் இந்த தேதியில் வெளியாகலாம் என கோடம்பாக்க வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து ’சுல்தான்’ என்னும் புதிய படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Intro:Body:

soorarai pottru release date

Conclusion:
Last Updated : Oct 31, 2019, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.