சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கைதி' படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் லாரி ஓட்டுநராக தோன்றும் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக வலம்வருகிறார். அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் நரேன் நடித்துள்ளார்.
நடிகர்கள் ஜார்ஜ் மரியான், ரமணா, வாட்சன் சக்ரவர்த்தி, யோகி பாபு, மகாநதி சங்கர், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கைதி படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
-
#Kaithi #KaithiDiwali pic.twitter.com/H3DlXndMjq
— S.R.Prabhu (@prabhu_sr) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Kaithi #KaithiDiwali pic.twitter.com/H3DlXndMjq
— S.R.Prabhu (@prabhu_sr) October 14, 2019#Kaithi #KaithiDiwali pic.twitter.com/H3DlXndMjq
— S.R.Prabhu (@prabhu_sr) October 14, 2019
இந்தப் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது. படம் முழுக்க மூன்றே பெண் கேரக்டர்கள்தான் இடம்பெறுவதாக முன்னரே கூறப்பட்டது. மேலும், காதல் காட்சிகள், டூயட் பாடல்கள் என எதுவுமே இல்லாமல் படம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன், படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தெலுங்கு பதிப்பு ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தெலுங்கு ரசிகர்களும் படத்தை பாராட்டிவருகின்றனர்.
'மாநகரம்' படப் புகழ் லோகேஷ் கனகராஜ் 'கைதி' படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது.