மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில், ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் படத்தை வெகுவாக பாராட்டினர். இந்த படம் அமேசான் ப்ரைமில் மே 14ஆம் தேதி வெளியாகிறது.
- — Santhosh Narayanan (@Music_Santhosh) May 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Santhosh Narayanan (@Music_Santhosh) May 7, 2021
">— Santhosh Narayanan (@Music_Santhosh) May 7, 2021
தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான 'கண்டா வரச்சொல்லுங்க' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் இந்த படத்தின் டைட்டில் ட்ராக் ஆகும். ஏற்கனவே இந்த படத்திலிருந்து 'மஞ்சனத்திப் புராணம்', 'தட்டான் தட்டான்' பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த 'கண்டா வரச்சொல்லுங்க' பாடலின் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.