இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் காப்பான். பன்முகங்களை கொண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா இப்படத்தில் களம் இறங்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டீஸர் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே திரைப்படம் மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.