ஜெயம் ரவி நடிப்பில் 2019ஆம் வெளியான 'கோமாளி' திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், பெங்களூரு அகரா ஏரி அருகே உள்ள பூங்கா ஒன்றில், தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது பூங்காவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்கள், சம்யுக்தாவின் ஆடை குறித்து விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்யுக்தாவின் இரண்டு தோழிகளும் அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சம்யுக்தாவும் அவரது தோழிகளும் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவையும் வெளியிட்டார்.
-
The future of our country reflects on what we do today. We were abused and ridiculed by Kavitha Reddy at Agara Lake@BlrCityPolice @CPBlr
— Samyuktha Hegde (@SamyukthaHegde) September 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
There are witnesses and more video evidence
I request you to look into this#thisisWRONG
Our side of the storyhttps://t.co/xZik1HDYSs pic.twitter.com/MZ8F6CKqjw
">The future of our country reflects on what we do today. We were abused and ridiculed by Kavitha Reddy at Agara Lake@BlrCityPolice @CPBlr
— Samyuktha Hegde (@SamyukthaHegde) September 4, 2020
There are witnesses and more video evidence
I request you to look into this#thisisWRONG
Our side of the storyhttps://t.co/xZik1HDYSs pic.twitter.com/MZ8F6CKqjwThe future of our country reflects on what we do today. We were abused and ridiculed by Kavitha Reddy at Agara Lake@BlrCityPolice @CPBlr
— Samyuktha Hegde (@SamyukthaHegde) September 4, 2020
There are witnesses and more video evidence
I request you to look into this#thisisWRONG
Our side of the storyhttps://t.co/xZik1HDYSs pic.twitter.com/MZ8F6CKqjw
மேலும், பூங்காவில் சம்யுக்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவிதா ரெட்டி, பொது இடத்தில் சம்யுக்தா அநாகரிகமாக நடந்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, பூங்காவில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவிதா ரெட்டி தன்னிடம் முறைகேடு மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டி, நடிகை சம்யுக்தா ஹெக்டே காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.