ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள 'லாக் அப்' நிகழ்ச்சியினை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது கங்கனாவை நோக்கி பேசிய பத்திரிகையாளர் ஒருவர், கெஹ்ரையான் விளம்பர நிகழ்ச்சிக் கொண்டாட்டத்தின்போது, தீபிகாவின் ஆடைகள் குறித்து விமர்சிக்கப்பட்டது தொடர்பாக கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கங்கனா, “இதோ பாருங்கள். தன்னை தற்காத்துக் கொள்ள முடியாதவர்களை பாதுகாப்பதற்காகவே நான் இங்கிருக்கிறேன். அவரால் (தீபிகாவால்) தன்னை தற்காத்துக் கொள்ள முடியும். அவருக்கான சலுகையும், மேடையும் இங்கிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் என்னால் இங்கே அவரது படத்தை விளம்பரப்படுத்த முடியாது. உட்காருங்கள்” என கோபமாக கூறினார்.
இதனைக் கேட்டு பத்திரிகையாளர் திகைத்துப் போனது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதற்கிடையே 'லாக் அப்' ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவது தொடர்பாக கங்கனா உற்சாகமாக காணப்பட்டார். நிகழ்ச்சியில் 16 சர்ச்சைக்குரிய பிரபலங்கள் மாதக்கணக்கில் ஒன்றாக தங்கவைக்கப்படுவதுடன், அவர்களது அடிப்படை வசதிகள் அனைத்தும் பறிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கங்கனா ரனாவத் பேசுகையில், “இத்தகைய தனித்துவமான, அற்புதமான கருத்தாக்கத்துடன் கூடிய நிகழ்ச்சியின் மூலம் ஓடிடியில் நுழைவதால் உற்சாகமாக இருக்கிறேன். நிகழ்ச்சியானது வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி முதல் ALTBalaji, MX Player ஆகியவற்றில் வெளியாகவுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: நிரூப்புடன் எப்போது திருமணம்?; ரசிகருக்கு பதிலளித்த யாஷிகா!