ETV Bharat / sitara

முதல்ல ட்விட்டர், இப்போ இன்ஸ்டா... சோகத்தில் கங்கனா!

நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கங்கனா
கங்கனா
author img

By

Published : Aug 19, 2021, 10:19 AM IST

திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகளின் சமூக வலைதளப் பக்கங்களை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தை யாரோ ஹேக் செய்வதாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கைச் சீனாவிலிருந்து யாரோ ஹேக் செய்ய முயன்றனர். அப்போது எனக்கு இன்ஸ்டாகிராமிடமிருந்து எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைத்தது.

கங்கனா வெளியிட்ட பதிவு
கங்கனா வெளியிட்ட பதிவு

பிறகு காலை தலிபான் விவகாரம் குறித்து நான் பதிவு செய்த ஒரு போஸ்ட்கூட அதில் இல்லை. அனைத்தும் காணாமல் போனது. எவ்வளவு முயற்சி செய்து என்னுடைய தொலைபேசியில் என் இன்ஸ்டா கணக்கை பயன்படுத்த முடியவில்லை.

என் சகோதரியின் தொலைப்பேசியில் என் கணக்கு இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது அதன் மூலம் இந்தப் பதிவை வெளியிடுகின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைப் பதிவுகளுக்கு பெயர் போன கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முன்னதாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹேக் செய்யப்பட்டது ஓய்வு பெற்ற டிஜிபி மகனின் சமூக வலைதளம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.