ETV Bharat / sitara

'தலைவி' படத்தில் இணைந்த ஜான்சி ராணி! - வாழ்க்கை வரலாறு படம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் மற்றொரு பிரபலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைவி
author img

By

Published : Mar 23, 2019, 9:11 AM IST

பிரபுதேவா நடிப்பில் வெளியான 'லஷ்மி' திரைப்படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'தலைவி'. இப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும்.

ஒருவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. கடந்த ஆண்டில் தெலுங்கிலும் தமிழிலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் 'மகாநடி' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'தலைவி' படமும் வரலாற்றில் இடம் பிடிப்பதற்காக உருவாகிக்கொண்டிருக்கிறது.

தலைவியாக நித்யா மேனன் நடிப்பதைத் தொடர்ந்து பிரபல நடிகை கங்கனா ரனாவத்தும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கங்கனா 'மணிகர்ணிகா' படத்தில் ஜான்சி ராணியாக நடித்ததைத் தொடர்ந்து தலைவி படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நற்செய்தியாக அமைந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.