ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் தற்போது கன்னட சூப்பர் ஸ்டாரான நடிகர் சிவராஜ்குமாரை வைத்து 'பைராகி' என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
'பைராகி' படம் குறித்தும் விஜய்மில்டனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் சிவராஜ்குமார் கூறியதாவது, “நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன்.
தமிழில் வெளியாகும் சினிமாக்களை உடனே பார்த்துவிடுவேன். நான் கமல் சாரின் ரசிகன். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை முதல் நாளே பார்த்துவிடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார்.
தமிழ் சினிமா தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த விஷயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது நான் உடனே ஒப்புக்கொண்டு விட்டேன்.
அளவான எமோஷனில் அட்டகாசமான ஆக்ஷன் கலந்த ஒரு அற்புதமான கதை. விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறியவர். சினிமா குறித்த தேர்ந்த அறிவு அவரிடம் கொட்டிக்கிடக்கிறது. எதையும் எளிமையாக செய்துவிடும் திறமை அவரிடம் இருக்கிறது.
மக்கள் 35 வருடமாக என்னை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தர கடினமாக உழைப்பேன். இந்தப்படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: அதர்வாவின் 'அட்ரஸ்' பட டீசர்: சூப்பர் ஸ்டார் பாராட்டு