ETV Bharat / sitara

அதர்வாவின் 'அட்ரஸ்' பட டீசர்: சூப்பர் ஸ்டார் பாராட்டு - கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார்

நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவாகியுள்ள 'அட்ரஸ்' படத்தின் டீசரை பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார்.

adharva
adharva
author img

By

Published : Jul 13, 2021, 2:29 PM IST

'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'வானவராயன் வல்லவராயன்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'அட்ரஸ்'.'

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கிக்கொண்டு 'அட்ரஸ்' இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதையை இப்படத்தின் மைய கரு. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இதில், 'காளி' என்கிற புரட்சிகரமான கதாபாத்திரத்தில் அதர்வா முரளி நடித்துள்ளார்.

இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் அவர், ஒரு காதல் பாடலிலும், இரண்டு சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான "அட்ரஸ்" திரைப்படத்தின் டீசர் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், 'அட்ரஸ்' படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது தனது சமூகவலைதள பக்கத்திலும் அட்ரஸ் படத்தின் டீசரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சிவராஜ்குமார் கூறுகையில், ”இயக்குநர் ராஜமோகன் எனது நீண்ட கால நண்பர். சமீபத்தில் அவரை சந்தித்தபோது, அவரின் "அட்ரஸ்" படம் குறித்து கேள்விப்பட்டேன். கதையின் மையமே மிக வித்தியாசமாக இருந்தது.

adharva
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார்

படத்தின் டீசரை எனக்கு காட்டினார். டீசர் மிக அற்புதமாக இருந்தது. படத்தின் டைட்டிலே கதை சொல்வதாக இருந்தது. இந்தப் படம் ஒரு மாற்றத்தை தரும். காட்சிகள் எல்லாம் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது. அதர்வா நன்றாக நடித்திருந்தார். இந்தக் குழு கடுமையாக உழைத்திருப்பது டீசரிலேயே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்றார்.

சிவராஜ்குமார் வெளியிட்ட வீடியோ குறித்து இயக்குநர் ராஜமோகன் கூறுகையில், ”நான் இயக்குநர் விஜய் மில்டனிடம் பல காலமாக உதவியாளராக வேலை பார்த்தவன். திரையுலகில் அவர்தான் என் குரு. இயக்குநராக மாறிய பின்னரும் அவர் அழைக்கும்போது அவர் படங்களில் வேலை பார்ப்பேன்.

விஜய் மில்டன் இப்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வைத்து, படம் இயக்கி கொண்டிருக்கிறார். அதில் நானும் வேலை பார்த்தேன். எனக்கு சிவராஜ்குமாரை முன்பிருந்தே தெரியும்.

அவர் என்னை குறித்து விசாரித்தபோது, என் படத்தின் டீசரை காட்டினேன். ஆச்சர்யப்பட்டு படம் குறித்து அனைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்துகொண்டார். என்னை வெகுவாக பாராட்டியதோடு படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடத்திலும் இந்தப் படம் குறித்து பாரட்டி பேசினார்.

ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு மெனக்கெடலுடன் அனைவர் முன்னிலையிலும் பாரட்டியது பெரும் மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அவர் அத்தோடு நில்லாமல் டீசரை கேட்டு வாங்கி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.

படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி ஒரு வீடியோ பதிவு செய்து மிக உச்சத்தில் இருக்கும் நடிகர் வெளியிட்டது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. அட்ரஸ் படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடமிருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஜனரஞ்சகமான படைப்பாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு பக்காவான கதை ரெடி பண்ணும் ரஜினி ரசிகர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.