கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பழம் பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக்.29) காலை புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இசிஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களில் ஒருவரான ரங்கநாத் நாயக் கூறுகையில், புனித் ராஜ்குமார் இன்று (அக்.29) காலை 11.30அளவில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனைக்கு வரும்போத அவரது உடல்நிலை மோசமானது. எங்களால் முடிந்தவரை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றார்.
இந்நிலையில், சிகிச்சை பலன்றி புனித் ராஜ்குமார் (46) உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகினர் மட்டுமல்லாது இந்திய திரையுலகினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புனித் ராஜ்குமாரின் மறைவையடுத்து திரைபிரபலங்கள், ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மட்டுமல்லாமல், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் புனித் ராஜ்குமார். 29 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர், 1975 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 'யுவரத்னா'