பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2006ஆம் ஆண்டு ஒளிபரப்பான தொடர், 'கனா காணும் காலங்கள்'.
பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு வெளியான இத்தொடர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
வெற்றிக்கு விஜய் ஆண்டனி காரணம்
இத்தொடர் வெற்றியடைந்ததற்கு கதையோ அல்லது நடிகர்களோ மட்டும் காரணம் கிடையாது.
இத்தொடரின் பாடலும் மிகவும் முக்கியக் காரணம். மிக ஜாலியாக அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
'கனா காணும் காலங்கள்' வெற்றியைத் தொடர்ந்து, 'கனா காணும் காலங்கள் கல்லூரிச் சாலை', 'கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை' ஆகிய தொடர்கள் வெளியானது.
-
உணர்வுபூர்வமான நினைவுகளின் சங்கமம்! ❤
— Vijay Television (@vijaytelevision) July 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
கனா காணும் காலங்கள் Reunion - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KanaKaanumKaalangalReunion #KKK pic.twitter.com/6GtxhX2Xuf
">உணர்வுபூர்வமான நினைவுகளின் சங்கமம்! ❤
— Vijay Television (@vijaytelevision) July 14, 2021
கனா காணும் காலங்கள் Reunion - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KanaKaanumKaalangalReunion #KKK pic.twitter.com/6GtxhX2Xufஉணர்வுபூர்வமான நினைவுகளின் சங்கமம்! ❤
— Vijay Television (@vijaytelevision) July 14, 2021
கனா காணும் காலங்கள் Reunion - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KanaKaanumKaalangalReunion #KKK pic.twitter.com/6GtxhX2Xuf
15 ஆண்டுகள் கழித்து...
இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து, 'கனா காணும் காலங்கள் ரீயூனியன்' நிகழ்ச்சி பிரபலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
அந்நிகழ்ச்சியில், 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் அடியெடுத்து வைத்த அல்லு அர்ஜூன் மகள்