மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்து அல்போன்ஸ் புத்ரன் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
நேரம், பிரமேம் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். சமீபத்தில் கரோனா ஊரடங்கு நேரத்தில் திரைத்துறை கலைஞர்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என காட்டமாக பதிவு செய்திருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
சார், மைக்கேல் மதன காமராஜன் படத்தை எப்படி எடுத்தீர்கள் என்று கூறமுடியுமா. தசாவதாரம் திரைப்படம் எல்லாம் திரைப்பட உருவாக்கத்தில் முனைவர் பட்டம் பெறுவது போல.. மைக்கேல் மதன காமராஜன் படமும் பட்டப்படிப்பு போலதான் என குறிப்பிட்டிருந்தார்.
நான்கு நாட்களுக்கு பிறகு கமல் இதற்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து கமல், மிக்க நன்றி அல்போன்ஸ் புத்ரன். விரைவில் சொல்கிறேன், அது உங்களுக்கு எவ்வளவு கற்பிக்கும் என்பது தெரியவில்லை. எனக்கு அது ஒரு மாஸ்டர் கிளாஸ்தான். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தைப் பற்றி பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்பிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செப்டம்பர் முதல் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திறக்கும்!