நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை இரவு (அக்.28) சென்னை காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு, ரத்த நாள திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ரஜினிகாந்திற்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று (அக்.29) அறிக்கை வெளியிட்டது.
-
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 29, 2021மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 29, 2021
விரைவில் ரஜினிகாந்த் நலம் பெற்று வர வேண்டும் என ரசிகர்கள் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் பதிவு வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு - அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?