சுமார் 120 படங்களுக்கு மேல் நடித்த சாருஹாசன் இன்று தனது 90ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்த பெருமையும் சாருஹாசனுக்கு உண்டு.
1979இல் இயக்குநர் மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தில் அறிமுகமாகி, கடந்த ஆண்டு வெளியான 'தா தா 87' திரைப்படத்தில் இறுதியாக காணப்பட்டார் சாருஹாசன்.
சாருஹாசனின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இவரது சகோதரரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
-
எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான். pic.twitter.com/In4sNFVu3K
— Kamal Haasan (@ikamalhaasan) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான். pic.twitter.com/In4sNFVu3K
— Kamal Haasan (@ikamalhaasan) January 5, 2020எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான். pic.twitter.com/In4sNFVu3K
— Kamal Haasan (@ikamalhaasan) January 5, 2020
அப்பதிவில் சாருஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருடன் கமலஹாசனின் குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த கமல்ஹாசன், தனது சகோதரருக்கு தன் வாழ்த்தையும் பகிர்ந்தார். பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அசுரனை தொடர்ந்து 'அரசன்' பெயரில் அவதரிக்கும் தனுஷ்