ETV Bharat / sitara

‘ஹே ராம்’ விடுத்த எச்சரிக்கை உண்மையாகிறது - கமல்ஹாசன் - உலகநாயகன்

கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

Kamal haasan tweet on 20 years of hey ram movie

author img

By

Published : Feb 18, 2020, 7:05 PM IST

கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘ஹே ராம்’. இதனை அவரே எழுதி, தயாரித்து நடித்திருந்தார். இதில் ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அடுல் குல்கர்னி, ஓம் பூரி, கிரிஷ் கர்னாட், ஹேமா மாலினி, ஷாருக்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ஹே ராம் படத்தின் 20ஆம் ஆண்டு. சரியான நேரத்தில் நாம் இந்தப் படத்தை எடுத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் ஏற்படுத்திய பீதியும், விடுத்த எச்சரிக்கையும் உண்மையாகிக் கொண்டிருப்பது சோகம். நம் நாட்டின் நல்லிணத்தை மனதில் கொண்டு நாம் இந்த சவால்களை வென்றெடுப்போம். நாளை நமதே என குறிப்பிட்டுள்ளார்.

  • 20 years of Hey Ram. Glad we made that film in time. Sad the apprehensions and warnings the film spoke about are coming true. We must surmount these challenges to the harmony of this country and we shall. Hum honge kaamiyaab. நாளை நமதே.

    — Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இந்தப் படத்தின் மீதி மதிப்பு வைத்து அதனைக் கொண்டாடும் அத்தனை நபர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேபோல் ‘ஹே ராம்’ படத்தில் பணியாற்றிய மறைந்த கலைஞர்களான கிரிஷ் கர்னாட், வாலி உள்ளிட்டோரை பிரிந்து தவிப்பதாகவும் கமல் ட்வீட் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.