ETV Bharat / sitara

'சார்பட்டா பரம்பரை' படக்குழுவை நேரில் பாராட்டிய கமல்ஹாசன் - சார்பட்டா பரம்பரை

நடிகர் ஆர்யா, இயக்குநர் பா. இரஞ்சித் உள்ளிட்ட 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

kamal
kamal
author img

By

Published : Aug 6, 2021, 3:37 PM IST

Updated : Aug 6, 2021, 3:43 PM IST

இயக்குநர் பா. இரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'.

வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக ஆர்யா உடற்பயிற்சி மேற்கொண்டு, தனது உடலைக் கட்டுமஸ்தாக மாற்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப்படத்தை கே9 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை

கரோனா பரவல் காரணமாக, இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜூலை.22 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் நல்ல வரேவற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் ஆர்யா கதாபாத்திரம் மட்டுமல்லாது வேம்புலி, டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார் உள்ளிட்டப் பல கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சார்பட்டா குழுவைப் பாராட்டிய கமல்

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர். அந்தவகையில், நடிகர் கமல்ஹாசன் இன்று (ஆகஸ்ட்.06) நடிகர் ஆர்யா, இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர்கள் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கென், நடிகைகள் அனுபமா குமார், துஷாரா விஜயன் உள்ளிட்டோரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நத்தம் நாயகி 'சார்பட்டா மாரியம்மா'

Last Updated : Aug 6, 2021, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.