ETV Bharat / sitara

நடிப்பில் ஆல்ரவுண்டர் ஸ்ரீகாந்த் - ரஜினி, கமல் இரங்கல் - நடிகர் ஸ்ரீகாந்த்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த்,ரஜினி
ஸ்ரீகாந்த்,ரஜினி
author img

By

Published : Oct 13, 2021, 10:22 AM IST

சென்னை: தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

80-களின் தொடக்கத்தில் திரையுலகின் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரது திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்தவர் ஸ்ரீகாந்த். ரஜினி முதன்முதலில் கதாநாயகனாக நடித்த ’பைரவி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தது இவரே.

ஸ்ரீகாந்த்,ரஜினி
ஸ்ரீகாந்த்,ரஜினி

இவரது மறைவுக்குப் பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ”என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி இரங்கல்
ரஜினி இரங்கல்

கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமல் இரங்கல்
கமல் இரங்கல்

இதையும் படிங்க : கோயில்கள், பள்ளிகள் திறப்பு: முதலமைச்சரின் முடிவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.